மனிதர்களின் வாழ் நிலையை தீர்மானிப்பது உணர்வு அல்ல. மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது - தோழர் மார்க்ஸ்

About Us


இந்திய நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆக போகின்றன. ஆயினும் இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளும் , சாதிய ஒடுக்குமுறைகளும் இன்றளவும் குறையாமல் தலைவிரித்தாடுகின்றன . மாமேதை அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம் தீண்டாமையை ஒரு கொடும் குற்றமாக பிரகடனம் செய்கிறது . தீண்டாமை ஒழிப்புச்சட்டம் , மக்கள் குடியுரிமை சட்டம் ,வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் என அடுக்கடுக்கான சட்டங்கள் அமலில் இருந்த போதிலும் தீண்டாமையும் சாதி வன்கொடுமையும் ஒழியவே இல்லை என்பது தான் உண்மை நிலையாகும்.இந்திய அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் சாதிய அமைப்பும் ஆதிக்க சக்திகளின் செயல்படும் உள்ளன....

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1991 ம் ஆண்டு அன்றைய குடியரசு தலைவரிடம் அளித்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்....

" மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டி தனமான முறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சொந்த நாட்டு மக்களாலேயே தாக்கப்படுவது ஒரு அவமானமான துன்பமாகும் . பல நேரங்களில் இப்பெண்கள் தெருக்களில் நிர்வாணமாக ஊர்வலம் செல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களது குழந்தைகள் மிருகங்களை போல் வெட்டி கொல்லப்படுகின்றனர் . அவர்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரங்களும் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இக்கொடுமைகளையெல்லாம் அரசும் அரசு இயந்திரங்களும் மவுன சாட்சிகளாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. அல்லது கண்டு கொள்ளாமல் அலட்சியமாய் இருக்கின்றன அல்லது இது போல கொடுமைகளை நிகழ்த்துவோரிடம் கூட்டளிகளாகவே இணைந்து நிற்கின்றன என்பது வேதனையான ஒன்று " என அவ்வறிக்கை குறிப்பிடகிறது

தமிழகத்திலும் பரவலாக சாதிய ஒடுக்குமுறை களும் தீண்டாமைக் கொடுமைகளும் உள்ளன ஆதிக்க சக்திகள் மறுத்தாலும் , அரசு நிர்வாகம் மறைத்தாலும் வெளிவரும் விபரங்கள் இந்த உண்மையை பறைசாற்றுகின்றன . பல்வேறு இடது சாரி அமைப்புகள் , மனித உரிமை அமைப்புகள் , தலித் அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் பல்வேறு தீண்டாமை வடிவங்களையும் கொடுமைகளையும் வெளிப்படுத்தியுள்ளன .

எனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துடன் நிலம், கூலிக்கான வர்க்க போராட்டத்துடனும் இணைந்தது இப்பார்வையோடு தீண்டாமை ஒழிப்பில் அக்கறையுடைய அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டிய காலமிது...
தீண்டாமை ஒழிப்பு என்னும் மகத்தான ஒற்றுமையை நிலைநாட்ட வலுவான பரந்துபட்ட ஜனநாயக மேடை அவசியமாகும்... இதை கருத்தில் கொண்டே தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி பரந்துபட்ட தீண்டாமைக்கு எதிரான அணிசேர்க்கையை திரட்டி களத்திலும் கருத்திலும் போராடிக்கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment

ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என...