மனிதர்களின் வாழ் நிலையை தீர்மானிப்பது உணர்வு அல்ல. மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது - தோழர் மார்க்ஸ்

Tuesday, July 9, 2019

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி- சுற்றறிக்கை

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
568,அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை 18.            
சுற்றறிக்கை
 

அன்பான தோழர்களுக்கு வணக்கம் 

நமது அமைப்பின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 03.07.2019 அன்று தஞ்சாவூரில் மாநில துணைத் தலைவர் தோழர் பி.பி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.ஏற்கனவே  மே 25,26 தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்ட முடிவுகளை, மாவட்ட செயலாளர் கூட்டம் மேலும் செழுமைப்படுத்தியது.


மக்களோடு ஒரு பரந்த உரையாடல்
-----------------------------------------------------------------
சாதியம் தகர்ப்போம்!                மனிதம் வளர்ப்போம்!
தமிழ்ச் சமூகத்துடன் ஒரு பரந்த உரையாடல்
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை (துவங்கும் தேதிகளில் சிறிது மாற்றங்களை மாவட்டக் குழுக்கள் செய்து கொள்ளலாம்)

மாநில மாநாட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டிற்காக பிரச்சாரம் அல்ல பிரச்சாரத்திற்காகத் தான் மாநாடு.
ஆகப்பெரிய கனவுகளோடும், மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும் இந்த பிரச்சார இயக்கத்தை நாம் நடத்த இருக்கிறோம். 

எதற்காக இந்த உரையாடல்
---------------------------------------------------

சட்டப்படி தீண்டாமையும்,சாதிய பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டு 70 ஆண்டுகள் கடந்து விட்டது.ஆனால்
இன்றும் சமூகத்தின் மாற்ற முடியாத விதியாக சாதி இருக்கிறது.

சுயசாதி பெருமிதங்களும், சாதி அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடையாள உணர்வும்  இந்தியாவின் எந்த சாதியையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலை இந்திய அளவிலும் தமிழகத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை கற்பனைக்கு எட்டாத வகையில் பாதிக்கிறது.வர்க்கமாக அவர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கிறது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்துவது. இழிவுக்குறியவர்கள் என்ற கருத்தோட்டத்தோடு தீண்டாமையைக் கடைபிடிப்பது பொது வெளிகளைப் பயன்படுத்த தடை விதிப்பது, வன்கொடுமைகளில் ஈடுபடுவது, ஈவிறக்கமிற்றி கொலை செய்வது என்று தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்து வருகிற சாதிய நிகழ்ச்சிநிரல் மனித பண்புகள் அற்றது. 

சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லித் தரவேண்டிய பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் சாதிய ஒருங்கிணைப்பும் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன்.

இந்தப் பின்னணியில் தான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 
சாதியம் தகர்ப்போம்!
மனிதம் வளர்ப்போம்! என்கிற இந்த உரையாடல்களை முன்னெடுக்கிறது.
நம்முடைய அன்பிற்குறிய தலைவர் தோழர்.என்.சங்கரய்யா அவர்கள் சமூகத்தின் நிகழ்ச்சிநிரலில் குறுக்கீடு செய்திட வேண்டும் குறிப்பிடுவார்.
சமூகம் சரியென்று ஏற்றுக்கொண்டிருக்கிற தவறான கோட்பாடுகளான சாதியம்,மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூகத்தின் நிகழ்ச்சி நிரல்களில் வலிமையான குறுக்கீடுகளை நாம் செய்திட வேண்டும். அத்தகைய ஒரு குறுக்கீடு தான் 
சாதியம் தகர்ப்போம்
மனிதம் வளர்ப்போம்!


யாரிடம் இந்த உரையாடல்
-------------------------------------------------

மக்கள் மத்தியில்இந்த உரையாடலைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நாம் சந்திக்கப் போகிற மக்களை பின்வரும் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம்.

1.கல்வி நிலையங்கள்

கல்வி நிலையங்களில் மாணவர்வர்களிடம் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, என்ற வடிவத்தில் "சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!"என்ற தலைப்பில் நடத்தலாம். ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் சின்ன சின்ன உரையாடல் கூட்டங்களை நடத்தலாம்.
நமது ஆசிரியர் அரங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாணவர் சங்க தோழர்களைத் தனி குழுவாக அமைத்து இப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.


2 நடுத்தர வர்க்கத்தினர்  

அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள்,காப்பீட்டு கழக ஊழியர்கள்,தொலைத்தொடர்பு ஊழியர்கள் போன்ற தோழர்களை ஒரு குழுவாக அமைத்து சாத்தியமான அனைத்து அலுவலகங்களிலும் உரையாடல்கள் நடத்திட வேண்டும்.

3.தொழிலாளர்கள்

போக்குவரத்து,மின்சாரம் உள்ளிட்ட நிறுவன தொழிலாளர்கள், மற்றும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களிடம் உரையாடல் நடைபெற வேண்டும்.வாயிற் கூட்டங்கள்,துண்டு பிரசுரம் விநியோகம் என்பதாக இப்பணிகள் அமையலாம்.
இத்துறை சார்ந்த தோழர்களை குழுவாக்கி செயல்படுத்திட வேண்டும்.

4.பொதுமக்கள்

கிராமம்,நகரம் என மக்கள் குடியிருப்பு பகுதிகள்,மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உரையாடல்கள் நடுத்துவது.மாவட்ட, வட்ட தோழர்களை குழுவாக்கி மக்கள் மத்தியில் உரையாடல்கள் நடத்திட வேண்டும்.

முன்தயாரிப்புகள்,ஆலோசனைகள்
-----------------------------------------------------------------

*தனித்தனியாக துண்டறிக்கைகள் வெளியிட வேண்டும். துண்டறிக்கை மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும்.

*பிரசுரம் ஒன்று மிகக்குறைந்த விலையில் வெளியிடப்படும்.
அணையா வெண்மணி இதற்காகவே தயாராகி வருகிறது.

*குறும்படங்கள்,ஆளுமைகளின் வேண்டுகோளுடன் வீடியோக்கள் தயாராகி வருகிறது.

*திண்ணைப் பிரச்சாரம் வடிவத்தில் ஒலிபெருக்கி இன்றி கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.

*விவாதங்கள் கடுமையாகாமல், அவர்களை மேம்படுத்துவதற்காக நடத்துகிறோம் என்ற புரிதலோடு நடத்திட வேண்டும்.

*மாநில,மாவட்ட, உள்ளூர் ஆளுமைகளை பயன்படுத்திட வேண்டும்.

*மாநில அளவில் அனைத்து சங்க தலைமைகளோடும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.இது காலத்தின் தேவையென்றும்,உரிய வகையில் இதில் இணைவதாகவும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மாவட்ட அளவிலும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்களோடு நேரில் சென்று அவர்களோடு விதாதித்து இதனை செயல்படுத்திட வேண்டும்.

*சமூக வளைதளம்

பொது சமூகத்தில் மிகமிக வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துகிற முமநூல்,மற்றும் வாட்ஷ்அப் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பகிர்வுகள் நடைபெறும் விதமாக இதற்கென்று தனி குழுக்கள் அமைத்திட வேண்டும்.

ஊடகங்கள்
---------------------
பத்திரிக்கைள் மற்றும் காட்சி ஊடகங்களிலும் செய்திவருவதை உறுதி செய்திட வேண்டும்.

~ விளையாட்டு மைதானங்கள்
~ விடுதிகள் 
--பேருந்து நிலையங்கள்
~ ரயில் நிலையங்கள்
~ காலை நடைபயிற்சி இடங்கள்
~ தொழிற்சாலை வாயில்கள்
~ அலுவலக வாயில்கள்
~ ஆலயங்கள்
....கடை வீதிகள்
~ குடியிருப்பு பகுதிகள். 
~ அடுக்ககங்கள்.
 ~ குடும்ப உறுப்பினர்கள் சங்கமம். 
~ சங்க பேரவைகள்
~ அமைப்பு சாரா தொழிலாளர்              கூடுமிடங்கள்.
~ திரைத் துறையினர் சந்திப்பு
~ ஊடக நண்பர் உரையாடல்.
--கிராமசபைக் கூட்டம்
--- மினிமாரத்தான்

 என்று அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

*நவீன வடிவங்கள்
-----------------------------------

சாதி இருளுக்கு எதிரான வெளிச்சம்( என இரவு 7 மணிக்கு செல் பேசி ஒளியை, மெழுகுவர்த்தி... இப்படி யோசிக்கலாம்)

சாதிக்கு எதிரான செல்ஃபி என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். 

கரம் கோர்ப்போம் போன்ற நிகழ்ச்சிகள்

இன்னும்,இன்னும் எண்ணங்கள் சிறகடித்து சாதியத்தை சிதைக்கட்டும்.

இவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட தேவையான நிதியையும்  உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

தோழர்களே சாதியம் என்கிற நிலபிரபுத்துவ பிற்போக்கு கருதியலுக்கு எதிரான பாட்டாளி வர்க்க கருத்தியல் போராட்டம் இது.

-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
மாநில மாநாடு
----------------------------
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாட்டினை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் ஆகஸ்ட் 15 16 17 தேதிகளில்  நடத்துவதற்கு  தஞ்சாவூரில் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.03.07.19 அன்று    மாலை வரவேற்புக் கூட்டம் மீண்டும் நடைபெற்றது.
வரவேற்புக்குழு தலைவர் இயக்குநர் தோழர் ராஜூமுருகன்,நமது மாநில தலைவர் தோழர்.பி.சம்பத் பங்கேற்றனர். தஞ்சை நகரின் பல இடங்களில் சுவர் எழுத்துக்கள் அலங்கரிக்கின்றன. மாநாட்டு பணிகள் துவங்கி விட்டன.
மாநிலம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டு காலத்தில்,களத்தில் நம்மால் நிறைவேற்றப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் பிரதிபலிக்கும் விதமாக எழுச்சியோடு மாநில மாநாட்டுப் பணிகளை துவக்க வேண்டும்.

விளம்பரம்
-------------------- 
மாநாட்டினை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக சுவர் எழுத்துக்கள்,சுவரொட்டிகள் விளம்பர தட்டிகள் துண்டறிக்கைகள் என்கிற வழக்கமான விளம்பர பணிகளோடு சமூக வலைதளம் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள இன்னும் இன்னும் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் மாநாடு செய்தி வலிமையாக தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஜூலை 20 க்குள் முழுமையாக விளம்பரப் பணிகளை நிறைவு செய்திட வேண்டும்.

பிரதிநிதிகள் 
-------------------------
மாநிலக் குழுவில் முடிவு செய்யப்பட்டு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள எண்ணிக்கையில் பெண் பிரதிநிதிகள் உள்பட மாவட்ட மாநாட்டில் அல்லது மாவட்ட குழுவில் தேர்வு செய்திட வேண்டும்.
பிரதிநிதி கட்டணம் ரூ 500.பிரதிநிதிகள் மாநாடு 15.08.2019 அன்று பிற்பகல்  3.00 மணிக்கு துவங்கும்.மதிய உணவு அரங்கில் ஏற்பாடு செய்யப்படும்.
பிரதிநிதிகள் தேர்வை பொருத்தவரை நமது  எதிர்காலத்திற்கு தேவை என்பதற்கே முன்னுரிமை வழங்கிட வேண்டும். மாநில மாநாட்டு அறிக்கை பிரதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு  அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி மாநில மாநாட்டிற்கான விவாத குறிப்புகளோடு மாநாட்டிற்கு வரவேண்டும். வேலை அறிக்கை முன்மொழியப்பட்டவுடன் விவாதம் துவங்கும்.

பேரணி,பொதுக்கூட்டம்
---------------------------------------------
17.08.2019 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு எழுச்சியான சாதி ஒழிப்பு பேரணி துவங்கும்.தொடந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

தோழமையுடன்.     
பி.சம்பத்.           கே.சாமுவேல்ராஜ்
தலைவர்.            பொதுசெயலாளர்

No comments:

Post a Comment

ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என...