மனிதர்களின் வாழ் நிலையை தீர்மானிப்பது உணர்வு அல்ல. மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது - தோழர் மார்க்ஸ்

Wednesday, July 10, 2019

அவினாசி சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை நடந்து ஓராண்டாகியும் அரசு எவ்விதமான நீதியும் வழங்காததற்கு கண்டனங்கள் - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

"கடந்த 17.7.2018 அன்று அவினாசி ஒன்றியம், குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக் கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக பணியமர்த்தப்பட்ட பாப்பாள் மீது, உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் சிலர், அரசு அலுவலர்களை நிர்ப்பந்தப்படுத்தி, தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தினர்."

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் போராட்டத்தால்
அவர்கள் மீது, பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் ஓராண்டு காலத்தை காவல்துறை எடுத்துக் கொண்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் பரமசாமி இவ்வழக்கின் விசாரணை அலுவலராக இருந்தால், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என ஏற்கனவே கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தியும் அக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
தற்போது ஓராண்டுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது, இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் இதே நிலைதான். 

தீண்டாமைக்கு எதிரான கண்டன கூட்டமைப்பு:

எனவே, தமிழக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினுடைய இத்தகைய போக்கைக் கண்டித்து, வருகிற 19.7.19 (வெள்ளி) அன்று மாலை 5 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடத்திட கண்டன கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர். குமார், மாவட்டச் செயலாளர்
ச. நந்தகோபால், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, அவினாசி ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் முருகன், த. பெ. தி. க. திருப்பூர் மாநகரச் செயலாளர் சண். முத்துக்குமார், ஆதித் தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர் வேந்தன் மகேஷ், மாநில துணைச் செயலாளர் விடுதலைச் செல்வன், தமிழ்ச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அகத்தியன், தலித் விடுதலைக் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மூர்த்தி, காட்டாறு இதழ்குழு செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 

No comments:

Post a Comment

ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என...