ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்ற விளம்பரம் நேற்று 20.10.2019 தி இந்து செய்திதாளில் வந்துள்ளது. இதில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பிராமின்ஸ் _ க்கு மட்டும் தான் விற்பனை என குறிப்பிட்டுள்ளது. பிராமின்ஸ் தவிர மற்ற அனைத்து சாதி, மதம் சார்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை என்பதும்,குறிப்பிட்டு தலித், சிறுப்பான்மை மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் இல்லை என்பதே விளம்பரத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. இந்த செயல் தீண்டாமையின் நவீன வடிவமாகும். எனவே சொகுசு குடியிருப்பு வீடுகள் ( ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்சன்) விற்பனையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்திட கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் , ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment